ஆசிரியர் எண்ணம் மாணவன் சிந்தனை ....
நம்மள எல்லாம் படச்சது ஆண்டவன் தான் இந்த பரிணாம(evalution) வளர்ச்சினு சொல்லுறது எல்லாம் அறியாமை. பரிணாம வளர்ச்சினு குரங்கில் இருந்து மனிதன் வந்ததா சொல்லுறாங்க அதுக்கு ரொம்ப மில்லியன் வருஷம் ஆகும்னு சொல்லுறாங்க அப்படினா இந்த மனிதனுக்கு அடுத்த நிலை(stage) என்ன? மனிதன் தோன்றி இவ்ளோ மில்லியன் வருசம் ஆகிருச்சி இதுந்தும் இன்னும் மனிதன் எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் அடையல அப்படினா என்ன அர்த்தம்? பரிணாம வளர்ச்சிங்கறது சும்மா அது ஒரு அறியாமை தான்...
இப்படின்னு ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் கூறினர்.எனக்கு இந்த கருத்தில் முரண்பாடு உள்ளது சில சந்தேகங்களும் சில கேள்விகளும் உள்ளன.அதை பற்றி தான் இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன்.
பரிணாம வளர்ச்சினா என்ன? என் ஆசிரியர் சொன்ன மாதிரி (வெறும்)உடம்பில் ஏற்படுகிற மாற்றம் மட்டும் தானா? நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்க உடலமைப்பில் ஏற்படுகிற மாற்றம் ஏதோ சும்மா தானா மாற்றி கொண்ட மாற்றமா?அந்த உயிரினத்தோடு சூழ்நிலையை பொறுத்து ஏற்படுகிற கொஞ்சம் கொஞ்சமா இல்ல சின்ன சின்ன மாற்றம் அது நடக்கிறது உடனே வெளிப்படையா தெரியாது. உதாரணம் நம் கைகளில் உள்ள விரல்களில் ஏன் இந்த பெரிய சின்ன(உயரம்,நீளம்,அது அமைய பெற்ற இடம்) வேறுபாடுகள்? எல்லா விரல்களும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? யோசிச்சி பாருங்க!! அப்படி மட்டும் இருந்தால் நம்மால எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாமல் போகும். இது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.
இதை போல் தான் நமக்கு பயன்படாத உறுப்புகளும் நம்மிடமிருந்து மறைந்து (or)இல்லாமல் போகும். உதாரணம் முடி(hair) முன்னர் அடர்த்தியாக உடலெங்கும் இருந்தது இன்று அடர்த்தி குறைந்து கொண்டே செல்கிறது சிலரிடம் இல்லாமலே கூட போகிறது.
இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் உடலமைப்பில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தேவையின் காரணமாகவே உள்ளன.சிந்திக்க சில உதாரணங்கள் (புருவம்,காது மடல்,மூக்கு அதனுள் இருக்கும் முடி,பாதம் அடிபகுதி(கால்)
பரிணாம வளர்ச்சியில் வெறும் உடலம்பில் மட்டும் தான் உள்ளதா? இல்லை. அதையும் தாண்டி எத்தனையோ உள்ளன.நமக்கு வெளிபடையாக தெரிந்தது இது மட்டும் தான் அதனால் தான் இதை சொல்லி கொண்டு இருக்கிறோம்.அனால் இதையெல்லாம் தாண்டி இன்னும் அறியபடாத விசயங்கள் நிறையவே உள்ளன.
உடல் உள்ளமைப்பில் பார்த்தால் இன்னும் பிரம்மாண்டமான சொல்லப்போனால் இன்னும் கண்டறியப்படாத எத்தனையோ பரிணாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது ஒவ்வொரு உயிரின் உடலும்.
நாம எவளோ தான் சொன்னாலும் மறுபடி அவரு கேட்பாரு,
அப்போ
"அடுத்த பரிணாம வளர்ச்சி என்ன?
மனிதனின் அடுத்த நிலை என்ன?"
கண்டிப்பாக பரிணாம வளர்ச்சி அடுத்த நிலையை நோக்கியே தன சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
அது உடலமைப்பிலோ உடல் உள்ளுறுப்பு அமைப்பிலோ அறிவு வளர்ச்சிலோ எதுவாக வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். எல்லா நிலையிலும் அடுத்த நிலையை(stage) நோக்கியே தான் சென்று கொண்டுள்ளது.
உதாரணம்,
1. Neha ramu(12) IQ point - 162 (Albert Einstein IQ point - 160)
2. Usain bolt 100m running - 9.63sec
3. Discovery channel - stan lee's superhuman
இதையும் தாண்டி இன்னும் எத்தனையோ இருக்கு பரிணாம வளர்ச்சி பத்தி சொல்ல.....
இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால் "அப்பன் பத்தடி பாய்ந்தால் புள்ள பதினாறு அடி பாயும்".
குறிப்பு :
எதுக்கு அப்போ ஏதும் சொல்லாம இப்போ சொல்லுரனு நினைக்கலாம் நிறையபேரு ஆனால் அப்போ சொல்ல நெறைய ஐடியா இல்லாம இருந்தது இப்போ எல்லாம் சேகரிச்சி சொல்லுறேன் அவ்ளோ தான்.
இந்த பதிவு எதுக்குனா ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததை சொல்லி மாணவர்களை நீயே அறிந்துகொள்ள ஆர்வத்தை துண்டிவிடுமாறு இருக்க வேண்டும். அதை விட்டு தன்னுடைய கருத்தை மற்றவர்கள் (மாணவர்கள்) ஏற்று கொள்ள வேண்டும் என்பதை போல பேச கூடாது என்பது என் கருத்து.
உங்கள் கருத்துகளை பகிரவும் நண்பர்களே.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக