பொய்க்கும் எனக்குமான இடைவெளி சிறியது ரொம்ப சிறியது.என்னோட வாழ்கையில் அழகான நாட்கள் உருவாக்கியதுல இந்த பொய்க்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது.என்னோட இன்பம் துன்பம் சந்தோசம் துக்கம்னு எல்லா நேரத்துலேயும் இந்த பொய் என்னோட ஒரு நண்பன் போல என்னுடே இருக்கிறது.
சிலருக்கு படிக்கறது எழுதுறது பயணங்கள்னு பிடிக்கிறது போல எனக்கும் பொய் பேசுறது பிடிக்கும்.அதுவும் எனக்கு பிடிச்சவங்க கிட்ட சொல்கிற பொய்கள் தான் அதிகம் அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு.வாழ்க்கையை சுவரசியப்படுத்துற விசயங்களில் பொய்யும் ஒன்ன இருக்குனு நம்புறவன் நான்.பொய் சொல்லுறதும் ஒரு கலை தான்.அந்த கலையை அழகா பண்ணினது என்னோட பள்ளிப் பருவத்தில் தான்.ஏன்னா அந்த பருவத்தில் தான் பொய்யை அழகா ஒரு நேர்த்தியோட சொல்லி இருக்கேன் .நான் சொல்லுறது பொய்யினு தெரியாத அளவுக்கு சொல்ல முடிஞ்சது.இப்போ இந்த இளமை பருவத்தில் அதன் மாதிரி நேர்த்தி ஏனோ வர மாட்டேன்கிறது.
என்னோட பள்ளி பருவத்தில் உண்மையை விட பொய் தான் அதிகமா பயன்படுத்தி இருப்பேன்.அந்த அளவு அதிகமா பயன்படுத்தியதற்கு பயம் கோவம் வெறுப்புனு நெறைய காரணங்கள் இருந்தாலும் இப்போ யோசிச்சி பார்க்கும் போது அது ஒரு போதையை தந்து அதுக்கு அடிமையாக வச்சிருந்தது(இப்பவும்) போல உணர்கிறேன்.இப்போ என்னோட வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது போதெல்லாம் நான் சொன்ன பொய்களும் அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளும் தான் நினைவுக்கு வருகிறது.அது துக்கமோ இன்பமோ ஏதுவ இருந்தாலும் அதை ரசிக்க தான் செய்கிறது மனது.நினைவுகள் சுமனதுங்கறதே இப்போ தான் புரிகிறது. மனசுக்கு பிடித்தவர்களிடம் சொன்ன பொய் தான் எனக்குள் எதோ ஒரு குற்ற உணர்வை தரும் அதனால் அவர்களிடம் உண்மையை சொல்லி விடுவேன்.அப்படி நான் சொன்ன உண்மைகள் தான் என்னை அதிகமாவே காயப்படுத்திருக்கு இருந்தாலும் மனசுக்கு பிடித்தவர்களிடம் பொய் சொல்லுவது ஒரு ஆனந்தமே அவங்ககிட்ட திரும்ப திரும்ப பொய் சொல்ல வைக்கிறது.அதனால் தான் ஏனோ நான் என்னை ஒரு உண்மையானவன் என சொல்லி கொள்ள விரும்புவது இல்லை.என்னை ஒரு பொய்யாளன் என சொல்லி கொள்ளவே விரும்புகிறேன்.
பின் குறிப்பு:
இது என்னுடைய முதல் பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக