12 நவ., 2011

எங்கள் நட்பை தெரிந்துதிருக்க வாய்ப்பில்லை...

                       அதிகாலையோ அந்திமாலையோ அவனை  கடந்து தான் செல்வேன்.நான் செல்லும் போதெல்லாம் என்னையே உற்று நோக்குவான் நான் தான் அவனை அலட்சியப்படுத்தி செல்வேன்.ஒரு முறை கூடஅவனிடம் நின்று பேசியதில்லை இருந்தும் என்னை அவன் உற்று நோக்காமல் இருந்தது கிடையாது.நான் நடந்து செல்கையில் அவன் நிழல் மூலம் தொட்டுப் பேச முயற்சிப்பான் அப்பொழுதும் நான் அவனை தட்டிவிடுவது போல் வேகமாக விலகிப் போவேன் இருந்தும் என்னை தினமும் தொடாமல் விடுவத்தில்லை.
ஒரு நாள் அவனருகில் ஒருவன் இளநீர் விற்று கொண்டு இருந்தான் அதை பார்த்த போது பொறாமையும் கோவமும் வந்தது.அதனால் இரு நாட்கள் அவனை பார்க்கவே செல்லவில்லை.அவனோ நான் வருவேன் என எண்ணி காத்திருந்து வாடியே விட்டான்.என்னாலும் அதற்க்கு மேல் இருப்பு கொள்ளாமல் அவனை காண சென்றேன்.என்னை பூக்கள் இல்லாவிடினும் இலைகளை உதிர்த்தே வரவேற்பு தந்தான் அன்றுதான் நான் அவனருகில் சென்று என் தோழ் சாய்த்து பேச தொடங்கினேன்.இதுவரை நான் அவனிடத்தில் ஒரு முறையேனும் பேசாமல் இருந்ததில்லை.எங்கள் நட்பு இப்படி இறுகி உறுதியகிக் கொண்டு இருந்த போது யார் கண் பட்டது என தெரியவில்லை என்னிடமிருந்து பிரித்து மன்னிக்கவும் அவனை அழித்து என்னிடமிருந்து பிரித்துச் சென்றனர் நெடுஞ்சாலை துறையினர் காரணம் கேட்டால் ஏதோ சாலை விரிவாக்கப் படுகிறதாம் அதனால் தான் இவைகளை வெட்டி எறிந்தோம் என்றனர்.

                 நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்தது என்ன அவ்வளோ பெரிய குற்றமா? இல்லை என்னிடம் நட்பு கொண்டது தான் குற்றமா? இன்றும் தெரியவில்லை அவன் செய்த குற்றம் என்ன என்பது...?இன்னும் பல கேள்விகள் என்னை துளைத்தெழுகிறது.இவன் எனக்கு மட்டுமா தோழன்? இன்னும் என்னைப்போல் எத்தனை தோழர்கள் இவனுக்கு இருந்து இருப்பார்கள்? அவர்கள் இவனை காண வந்தால் எவளோ காயமுற்றுப் போவார்கள்..?


பார்த்து கொண்டோம் 
பேசி கொள்ளவில்லை - ஆனால்
நட்பாகிப்  போனோம்
நடந்து செல்கையில் 
அவன் நிழலில் நிற்கையில் 
நிம்மதி கொள்வேன் 
இப்போது நிம்மதி 
இழந்தேன் அவனில்லாமல் 
யாருக்கு தெரியும் 
எங்கள் இருவரின் 
நட்பைப் பற்றி..?
நான் சிந்தும் கண்ணீர்
துளிகளுக்கு கூட 
தெரிந்து இருக்க 
வாயிப்பில்லை....

பின் குறிப்பு:
                இப்போது வருத்த பட்டு கொண்டு தான் இருக்கிறேன் என்ன நட்பை இழந்ததால் மட்டும் இல்லை எங்களை போல் இன்னும் எத்தனை நட்பை இதே போன்ற காரணத்திற்காக அழிக்கப் போகிறார்கள் என்பதற்காக... என் நட்பின் இல்லை என் தோழனின் இறப்பை கனத்த இதயங்களுடன் பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு 
                   நிழலின் தோழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக