10 ஏப்., 2013

ஆசிரியர்  எண்ணம்  மாணவன்  சிந்தனை ....


                   நம்மள எல்லாம் படச்சது ஆண்டவன் தான் இந்த பரிணாம(evalution) வளர்ச்சினு சொல்லுறது எல்லாம் அறியாமை. பரிணாம வளர்ச்சினு  குரங்கில் இருந்து மனிதன் வந்ததா சொல்லுறாங்க அதுக்கு ரொம்ப மில்லியன் வருஷம் ஆகும்னு சொல்லுறாங்க அப்படினா இந்த மனிதனுக்கு அடுத்த நிலை(stage) என்ன? மனிதன் தோன்றி இவ்ளோ மில்லியன் வருசம் ஆகிருச்சி இதுந்தும் இன்னும் மனிதன் எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் அடையல அப்படினா என்ன அர்த்தம்?  பரிணாம வளர்ச்சிங்கறது  சும்மா அது ஒரு அறியாமை தான்...
     
            இப்படின்னு ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் கூறினர்.எனக்கு இந்த கருத்தில் முரண்பாடு உள்ளது சில சந்தேகங்களும் சில கேள்விகளும் உள்ளன.அதை பற்றி தான் இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

         பரிணாம வளர்ச்சினா என்ன? என் ஆசிரியர் சொன்ன மாதிரி (வெறும்)உடம்பில் ஏற்படுகிற மாற்றம் மட்டும் தானா? நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்க உடலமைப்பில் ஏற்படுகிற மாற்றம் ஏதோ சும்மா தானா மாற்றி கொண்ட மாற்றமா?அந்த உயிரினத்தோடு சூழ்நிலையை பொறுத்து ஏற்படுகிற கொஞ்சம் கொஞ்சமா இல்ல சின்ன சின்ன மாற்றம் அது நடக்கிறது உடனே வெளிப்படையா தெரியாது. உதாரணம்  நம் கைகளில் உள்ள விரல்களில் ஏன் இந்த பெரிய சின்ன(உயரம்,நீளம்,அது அமைய பெற்ற இடம்) வேறுபாடுகள்? எல்லா விரல்களும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? யோசிச்சி பாருங்க!! அப்படி மட்டும் இருந்தால் நம்மால எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாமல் போகும். இது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.

                       இதை போல் தான் நமக்கு பயன்படாத உறுப்புகளும் நம்மிடமிருந்து மறைந்து (or)இல்லாமல் போகும். உதாரணம் முடி(hair) முன்னர் அடர்த்தியாக உடலெங்கும் இருந்தது இன்று அடர்த்தி குறைந்து கொண்டே செல்கிறது சிலரிடம் இல்லாமலே கூட போகிறது.


     இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் உடலமைப்பில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தேவையின் காரணமாகவே உள்ளன.சிந்திக்க சில உதாரணங்கள் (புருவம்,காது மடல்,மூக்கு அதனுள் இருக்கும் முடி,பாதம் அடிபகுதி(கால்) 

                       பரிணாம வளர்ச்சியில் வெறும் உடலம்பில் மட்டும் தான் உள்ளதா? இல்லை. அதையும் தாண்டி எத்தனையோ உள்ளன.நமக்கு வெளிபடையாக தெரிந்தது இது மட்டும் தான் அதனால் தான் இதை சொல்லி கொண்டு இருக்கிறோம்.அனால் இதையெல்லாம் தாண்டி இன்னும் அறியபடாத விசயங்கள் நிறையவே உள்ளன.

       உடல் உள்ளமைப்பில் பார்த்தால் இன்னும் பிரம்மாண்டமான சொல்லப்போனால்  இன்னும் கண்டறியப்படாத எத்தனையோ பரிணாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது ஒவ்வொரு உயிரின் உடலும்.

           நாம எவளோ தான் சொன்னாலும் மறுபடி அவரு கேட்பாரு,
      அப்போ 

"அடுத்த பரிணாம வளர்ச்சி என்ன?
  மனிதனின் அடுத்த நிலை என்ன?"

                          கண்டிப்பாக பரிணாம வளர்ச்சி அடுத்த நிலையை  நோக்கியே தன சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

                அது உடலமைப்பிலோ உடல் உள்ளுறுப்பு அமைப்பிலோ அறிவு வளர்ச்சிலோ எதுவாக வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். எல்லா நிலையிலும் அடுத்த  நிலையை(stage) நோக்கியே தான் சென்று கொண்டுள்ளது.

உதாரணம்,  
1. Neha ramu(12) IQ point - 162 (Albert Einstein IQ point - 160)
2. Usain bolt 100m running - 9.63sec
3. Discovery channel - stan lee's superhuman

          இதையும் தாண்டி இன்னும் எத்தனையோ இருக்கு பரிணாம வளர்ச்சி பத்தி சொல்ல.....

           இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால் "அப்பன் பத்தடி பாய்ந்தால் புள்ள பதினாறு அடி பாயும்".

குறிப்பு :
          எதுக்கு அப்போ ஏதும் சொல்லாம இப்போ சொல்லுரனு நினைக்கலாம் நிறையபேரு ஆனால் அப்போ சொல்ல நெறைய ஐடியா இல்லாம இருந்தது இப்போ எல்லாம் சேகரிச்சி சொல்லுறேன் அவ்ளோ தான்.

       இந்த பதிவு எதுக்குனா ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததை சொல்லி மாணவர்களை நீயே அறிந்துகொள்ள ஆர்வத்தை துண்டிவிடுமாறு இருக்க வேண்டும். அதை விட்டு தன்னுடைய கருத்தை மற்றவர்கள் (மாணவர்கள்) ஏற்று கொள்ள வேண்டும் என்பதை போல பேச கூடாது என்பது என் கருத்து.




உங்கள் கருத்துகளை பகிரவும் நண்பர்களே.....

6 செப்., 2012

என்ன ஆனது எனக்கு..?

எனக்கு என்ன ஆனது.? என்னுடைய கோபம் எனக்குள்ளேயே இருக்கிறதே...! நன் எப்படி இதனை அப்படியே ஏற்று கொண்டு இருக்கிறேனா இல்லை இறக்கிறேனா.?

ஏன் இந்த மவுனம்.? அவர்களை பார்த்து வந்த கோவம் எங்கே போனது.? ஏன் இப்படி தகிக்கும் மனதோடு வெறும் பிணம் ஆனேன்.? இவர்களை பார்த்து மற்றவர்களுக்கு வராத கோவம் ஏன்.? எதற்கு எனக்கு மட்டும் கோவம் வர வேண்டும்.?

எவ்வளவோ பேர் இருந்தும்  எனக்கு மட்டும் ஏன் இந்த கோவம்.? அதுவும் வெளியில் வராத கோவம்...அவமானமாகவே உள்ளது.

மானிடராய் பிறத்தலினால் அல்ல..
இவர்கள் இருக்கும் உலகில் நானும் இருப்பதால் அல்ல..
வேறு யாரும் இதை கேட்காததினாலோ அல்ல..
என் கோவத்தை ஒரு கேள்வியாக கூட கேட்கமுடியாமல் - எது
தடுத்ததோ அதன் மீது...

அநியாயத்தை கண்டு உன் மனம் கொதிக்குமானால் நீயும் என் தோழனே என்று சொன்ன " சே "விற்கு நான் தோழன் என்று சொல்லி வரும் மகிழ்ச்சியை விட அந்த அநியாயத்திற்கு எதிராக எதுவும் சொல்லாமல் செய்யாமல் இருப்பதனால் வரும் வேதனை அதிகமே...

நிகழ்வு
             1 . ஒரு கிழவன் ஒரு பொண்ணு கிட்ட பஸ் ஸ்டாண்டில்(CMBT - கோயம்பேட்) தப்பா நடந்துக்கிறான்.
             2 .ரயில் நிலையத்தில்(Bangalur) waiting hall -ல் இரு வாலிபர்கள் மொபைல் சார்ஜ் போடுகிறார்கள் மணிக்கணக்காக வேறு யாரையும் சார்ஜ் போட அனுமதிக்காமல்(இதில் அந்த மொபைல் வேற use பண்ணிடே)

மேல் குறிப்பிட்ட அந்த நபர்கள் தான் பிச்சைக்காரரிடம் சில காசுகளை பிச்சை போடுகிறார்கள்.
 ஏன்.? எதற்கு போடுகிறார்கள்.? 

3 பிப்., 2012

குழந்தை!!!!

மன்னிக்கவும் மறக்கவும்
தெரிந்த ஒரே கடவுள்....
யார் கடவுள் ???

காசு கொடுத்தா தான்
ஆசிர்வாதம்  தரும் கடவுள்
கல்லாய் கோவிலில் 
ஆசிர்வாதம் தந்து
காசு கேட்க்கும் கடவுள்
திருநங்கையாய் தெருவில்... 

12 நவ., 2011

எங்கள் நட்பை தெரிந்துதிருக்க வாய்ப்பில்லை...

                       அதிகாலையோ அந்திமாலையோ அவனை  கடந்து தான் செல்வேன்.நான் செல்லும் போதெல்லாம் என்னையே உற்று நோக்குவான் நான் தான் அவனை அலட்சியப்படுத்தி செல்வேன்.ஒரு முறை கூடஅவனிடம் நின்று பேசியதில்லை இருந்தும் என்னை அவன் உற்று நோக்காமல் இருந்தது கிடையாது.நான் நடந்து செல்கையில் அவன் நிழல் மூலம் தொட்டுப் பேச முயற்சிப்பான் அப்பொழுதும் நான் அவனை தட்டிவிடுவது போல் வேகமாக விலகிப் போவேன் இருந்தும் என்னை தினமும் தொடாமல் விடுவத்தில்லை.
ஒரு நாள் அவனருகில் ஒருவன் இளநீர் விற்று கொண்டு இருந்தான் அதை பார்த்த போது பொறாமையும் கோவமும் வந்தது.அதனால் இரு நாட்கள் அவனை பார்க்கவே செல்லவில்லை.அவனோ நான் வருவேன் என எண்ணி காத்திருந்து வாடியே விட்டான்.என்னாலும் அதற்க்கு மேல் இருப்பு கொள்ளாமல் அவனை காண சென்றேன்.என்னை பூக்கள் இல்லாவிடினும் இலைகளை உதிர்த்தே வரவேற்பு தந்தான் அன்றுதான் நான் அவனருகில் சென்று என் தோழ் சாய்த்து பேச தொடங்கினேன்.இதுவரை நான் அவனிடத்தில் ஒரு முறையேனும் பேசாமல் இருந்ததில்லை.எங்கள் நட்பு இப்படி இறுகி உறுதியகிக் கொண்டு இருந்த போது யார் கண் பட்டது என தெரியவில்லை என்னிடமிருந்து பிரித்து மன்னிக்கவும் அவனை அழித்து என்னிடமிருந்து பிரித்துச் சென்றனர் நெடுஞ்சாலை துறையினர் காரணம் கேட்டால் ஏதோ சாலை விரிவாக்கப் படுகிறதாம் அதனால் தான் இவைகளை வெட்டி எறிந்தோம் என்றனர்.

                 நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்தது என்ன அவ்வளோ பெரிய குற்றமா? இல்லை என்னிடம் நட்பு கொண்டது தான் குற்றமா? இன்றும் தெரியவில்லை அவன் செய்த குற்றம் என்ன என்பது...?இன்னும் பல கேள்விகள் என்னை துளைத்தெழுகிறது.இவன் எனக்கு மட்டுமா தோழன்? இன்னும் என்னைப்போல் எத்தனை தோழர்கள் இவனுக்கு இருந்து இருப்பார்கள்? அவர்கள் இவனை காண வந்தால் எவளோ காயமுற்றுப் போவார்கள்..?


பார்த்து கொண்டோம் 
பேசி கொள்ளவில்லை - ஆனால்
நட்பாகிப்  போனோம்
நடந்து செல்கையில் 
அவன் நிழலில் நிற்கையில் 
நிம்மதி கொள்வேன் 
இப்போது நிம்மதி 
இழந்தேன் அவனில்லாமல் 
யாருக்கு தெரியும் 
எங்கள் இருவரின் 
நட்பைப் பற்றி..?
நான் சிந்தும் கண்ணீர்
துளிகளுக்கு கூட 
தெரிந்து இருக்க 
வாயிப்பில்லை....

பின் குறிப்பு:
                இப்போது வருத்த பட்டு கொண்டு தான் இருக்கிறேன் என்ன நட்பை இழந்ததால் மட்டும் இல்லை எங்களை போல் இன்னும் எத்தனை நட்பை இதே போன்ற காரணத்திற்காக அழிக்கப் போகிறார்கள் என்பதற்காக... என் நட்பின் இல்லை என் தோழனின் இறப்பை கனத்த இதயங்களுடன் பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு 
                   நிழலின் தோழன்.